கர்மா ஒரு பூமராங்: ரவீந்திரன் - மகாலட்சுமி திருமணத்திற்கு வனிதாவின் பதிலடியா?

தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் நடிகை மகாலட்சுமி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம் குறித்து ஒருசிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். வனிதா மறுமணம் செய்தபோது விமர்சனம் செய்த நீங்கள் தற்போது மறுமணம் செய்து கொள்ளலாமா என்ற கேள்வியை எழுப்பினார்

அதற்கு பேட்டி ஒன்றின் மூலம் பதிலளித்த ரவீந்தர், ‘வனிதாவின் திருமணம் வேறு எங்கள் திருமண வேறு என்றும் வனிதா, பீட்டர் பாலை திருமணம் செய்தபோது அவர் விவாகரத்து பெறவில்லை என்றும் பீட்டர்பால் மனைவி நீதி கேட்டதால் தான், நான் இந்த விஷயம் குறித்து பேசினேன் என்றும் எனவே வனிதா திருமணத்திற்கும் எங்கள் திருமணத்திற்கும் வித்தியாசம் உள்ளது என்றும் கூறினார். மேலும் எங்கள் திருமணம் குறித்து வனிதாவுக்கு தெரிய வந்தால் அவர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பார் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மற்றவர்களின் வாழ்க்கை பற்றிப் பேச எனக்கு நேரமில்லை என்றும் நான் சந்தோஷமாகவும் பிஸியாகவும் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் கர்மா என்பது மிகவும் மோசமானது என்றும் எப்போது எப்படி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது அதற்கு தெரியும் என்றும் கர்மாவை நான் முழுவதுமாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்

வனிதாவின் இந்த டுவிட் ரவீந்திரன் - மகாலஷ்மி திருமணம் குறித்து தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.