அடுத்த திருமணத்திற்கு தமிழ்நாட்டுக்கே இன்விடேஷன் கொடுப்பேன்: வனிதா விஜயகுமார்..!
- IndiaGlitz, [Wednesday,March 27 2024]
நடிகை வனிதா விஜயகுமாரிடம் ரசிகர் ஒருவர் அடுத்த திருமணம் எப்போது? மறக்காமல் எங்களுக்கு அழைப்பிதழ் கொடுங்கள் என்று கேட்டபோது ’தமிழ்நாட்டுக்கே இன்விடேஷன் கொடுப்பேன்’ என்று வனிதா விஜயகுமார் பதில் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஜெயராஜன் ஆகியவர்களை திருமணம் செய்து அதன் பின் இருவரையும் விவாகரத்து செய்துவிட்ட நிலையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்பட்டது. இருப்பினும் அதை வனிதா விஜயகுமார் மறுத்திருந்தார்.
இந்த நிலையில் வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் செய்தியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது ஒரு ரசிகர் ’அடுத்த கல்யாணம் எப்போது? மறக்காமல் இன்விடேஷன் கொடுங்க? என்று கேட்டபோது எதிர்பாராததை எதிர்பாருங்கள், தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடிச்சு நியூஸ் கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.