உங்கள் வேலையை பாருங்கள், எங்களுக்கு எல்லாம் தெரியும்: அட்வைஸ் செய்த நெட்டிசனுக்கு வனிதா பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனக்கு அட்வைஸ் செய்த நெட்டிசன் ஒருவருக்கு ’எங்களுக்கு வாழ்க்கை என்றால் எப்படி வாழவேண்டும் என்பது தெரியும்’ என்றும் ’உங்கள் வாழ்க்கை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றும் பதிலடி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தான் இப்போது சிங்கிள் என்றும் ’அவைலபிள்’ என்றும் குறிப்பிட்டு தனது திருமணம் குறித்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் ’அவைலபிள்’ என்ற வார்த்தை தேவையா? என்றும் உங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு இனிமேலாவது இதுபோன்ற அசிங்கத்தை நிறுத்தி விடுங்கள் என்றும் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது என்றும் கமெண்ட் செய்திருந்தார்
அதற்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார் ’நாங்கள் அனைவரும் வளர்ந்து வருகிறோம், எங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும். எங்கள் கடமை என்ன என்பதும் தெரியும். எங்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் வந்து உதவி செய்யப் போகிறீர்களா? உங்களுடைய வாழ்க்கை எதுவோ அதை நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். நான் ஒரு நடிகை, என் நடிப்பு பிடித்திருந்தால் என் படங்களை பாருங்கள், மற்றபடி உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். வனிதா விஜயகுமாரின் இந்த பதிலடி வைரலாகி வருகிறது.
Thank u @CinemaVikatan@AnandaVikatan
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 10, 2021
For apologising for publishing a baseless rumour as viral news... Not married nor intend to .I am focusing on my career and living my life queen size..
For those who have a problem
I'm sorry to disappoint you???? https://t.co/IOr78oUCzy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com