எஸ்பிபி பாடலை பாடச் சொல்லி விஜய்யை நச்சரித்த வனிதா!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து ஒட்டுமொத்த திரையுலக பிரமுகர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருவதோடு அவரோடு பழகிய நாட்களையும் பகிர்ந்து வருகின்றனர்

இந்த நிலையில் ஏற்கனவே எஸ்பிபியின் மறைவிற்கு தனது டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்த நடிகை வனிதா விஜயகுமார் தற்போது எஸ்பிபி மற்றும் விஜய் ஆகியோர் இணைந்த ஒரு தகவலை தெரிவித்துள்ளார்

விஜய்யுடன் ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது எஸ்பிபி பாடிய ’மலரே மௌனமா’ என்ற பாடலை அடிக்கடி விஜய்யை பாட சொல்லி தான் கட்டாயப்படுத்தியதாகவும் தன்னுடைய தொல்லை தாங்காமல் விஜய் அவ்வப்போது எனக்காக அந்த பாடலை பாடுவார் என்றும் வனிதா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

எஸ்பிபி பாடலை விஜய்யை பாட வைத்தது குறித்த தகவலை வனிதா விஜயகுமார் தெரிவித்ததை அடுத்து விஜய் மற்றும் எஸ்பிபி ரசிகர்கள் இந்த டுவிட்டை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது