கொரோனாதேவி புகைப்படத்தை வனிதாவுக்கு அனுப்பிய நெட்டிசன்கள்: அவருடைய ரியாக்சன் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவையில் உள்ளவர்கள் ஒருபடி மேலே சென்று கொரோனாவிற்கு சிலை வைத்து அதற்கு கொரொனாதேவி என பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சில குறும்புக்கார நெட்டிசன்கள் கொரொனாதேவி சிலை, வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக கேலி கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு வெளியான மீம்ஸ்களில் ஒன்றை ஒரு நெட்டிசன் வனிதா விஜயகுமாரின் டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்து அனுப்பியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த வனிதா விஜயகுமார் ’அடக்கடவுளே! என்ன இது எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்? என்று பதிவு செய்து தன்னுடைய ரியாக்ஷனை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் அவர் இந்த மீம்ஸ்களை கண்டு கோபம் கொள்ளாமல் அவர் ஜாலியாக எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
Omg whats this everyone has been sending me this pic and memes https://t.co/AOTB0WSBBN
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) May 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout