திருமண அறிவிப்பா? திரைப்பட அறிவிப்பா? வனிதா விஜயகுமார் பதிவால் ரசிகர்கள் குழப்பம்..!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2024]

நடிகை வனிதா விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் ராபர்டுடன் காதலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அக்டோபர் 5ஆம் தேதி முக்கிய அறிவிப்புக்காக காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார். இது, அவர் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பா? அல்லது இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அறிவிப்பா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

நடிகர் விஜயகுமார் மகளான வனிதா விஜயகுமார், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், மற்றும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நிலையில், தற்போது திரை உலகில் பிஸியாக உள்ளார். இந்த நிலையில், இன்று திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராபர்ட் மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அக்டோபர் 5ஆம் தேதி முக்கிய அறிவிப்புக்காக காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் திருமண அழைப்பிதழை போல் தோன்றுவதால், வனிதாவுக்கு மீண்டும் திருமணமா? அல்லது வனிதா விஜயகுமாருடன் ராபர்ட் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்களா என்று கூறப்பட்ட நிலையில், அது அந்த படத்தின் புரோமோஷன் போஸ்டரா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இருப்பினும், அக்டோபர் 5ஆம் தேதி இந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ஹிந்தியில் ஏன் பேச வேண்டும்? நான் தென்னிந்தியர்.. நடிகை மீனா பதிலடி..!

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நடிகை மீனா கலந்து கொண்ட நிலையில், நிருபர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசுமாறு கேட்டபோது, "நான் ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்?

மகாளய அமாவாசை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் திதி கொடுக்கும் முறை

பித்ரு தோஷ நிவர்த்திக்கு சிறந்த நாள்! மகாளய அமாவாசை: முன்னோர்களை வழிபடும் சிறப்பு நாள் | ஆன்மீகக்ளிட்ஸ்

'வேட்டையன்' படத்தின் சென்சார் தகவல்.. ட்ரிம் செய்ய தேவை இல்லாத ரன்னிங் டைம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வேலையாய் உள்ளன.

எனது படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுகிறார்: இயக்குனர் அதிரடி அறிவிப்பு..

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், "மஞ்சள் வீரன்" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் செல்அம் அறிவித்திருப்பது பரபரப்பை

'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு எப்போது? நாயகி, வில்லன் யார்?

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்பதற்கான தகவல் கசிந்துள்ளது.