திருமண அறிவிப்பா? திரைப்பட அறிவிப்பா? வனிதா விஜயகுமார் பதிவால் ரசிகர்கள் குழப்பம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வனிதா விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் ராபர்டுடன் காதலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "அக்டோபர் 5ஆம் தேதி முக்கிய அறிவிப்புக்காக காத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார். இது, அவர் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பா? அல்லது இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அறிவிப்பா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
நடிகர் விஜயகுமார் மகளான வனிதா விஜயகுமார், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், மற்றும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நிலையில், தற்போது திரை உலகில் பிஸியாக உள்ளார். இந்த நிலையில், இன்று திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராபர்ட் மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அக்டோபர் 5ஆம் தேதி முக்கிய அறிவிப்புக்காக காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படம் திருமண அழைப்பிதழை போல் தோன்றுவதால், வனிதாவுக்கு மீண்டும் திருமணமா? அல்லது வனிதா விஜயகுமாருடன் ராபர்ட் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்களா என்று கூறப்பட்ட நிலையில், அது அந்த படத்தின் புரோமோஷன் போஸ்டரா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இருப்பினும், அக்டோபர் 5ஆம் தேதி இந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments