மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மதம் மாறினேன்: வனிதா விஜயகுமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மதம் மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக புத்த மதத்தை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியபோது, ‘கடந்த சில ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்வதற்காக தான் புத்த மதத்தை பின்பற்றுவதாகவும், இதனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ‘அந்தகன்’ உள்பட சுமார் 10 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout