வனிதாவின் அதிரடி முடிவு: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு

கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர்பால் திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக கடந்த சில நாட்களாக இடம்பெற்றது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி வனிதா விஜயகுமார், சூர்யா தேவி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் உள்பட ஒருசிலர் வனிதா திருமணம் குறித்து விவாதம் செய்ததும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

குறிப்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதாவின் சமீபத்திய விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று கஸ்தூரி மற்றும் வனிதா ஆகிய இருவரும் டுவிட்டரில் மோதிக் கொண்டது டுவிட்டர் பயனாளிகளுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் தற்போது வனிதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதன்படி டுவிட்டரில் இருந்து அவர் திடீரென விலகியுள்ளார். வனிதாவின் டுவிட்டர் பக்கம் தற்போது காலியாக உள்ளது என்பதும், வனிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. வனிதாவின் இந்த முடிவால் டுவிட்டர் பயனாளிகள் இந்த பிரச்சனையில் இருந்து தப்பினர் என்பது மட்டும் உண்மை

More News

லம்போர்கினி காரில் ரஜினியுடன் சென்றது யார் யார்? மீண்டும் டிரெண்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கூறிய 'சத்தியமா விடவே கூடாது'

கொரோனா ஒருவழியா முடிவுக்கு வந்துடும் போல… ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகத்தின் சிறப்பு அறிவிப்பு!!!

உலகளவில் கொரோனா தடுப்பூசி ஆய்வில் தற்போது ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகம் முன்னிலை பெற்று வருவதை செய்திகள் எடுத்துக் காட்டுகின்றன.

அருள்நிதியின் அடுத்த க்ரைம் துப்பறியும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

வம்சம்','மௌனகுரு','தகராறு' 'டிமான்டி காலனி' 'ஆறாது சினம்' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த அருள்நிதி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகவிருப்பதாகவும்,

கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில் 500 வீடியோக்கள் நீக்கம்: சென்னை போலீசார் அதிரடி

கருப்பர் கூட்டம் என்ற 'யு டியூப்' சேனலில் சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வீடியோ வெளியானதால் முருகபக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கீழடியில் ரூ.12.21 கோடி மதிப்பிலான தொல்பொருள் அருங்காட்சியகம்!!! அடிக்கல் நாட்டிய தமிழக முதலமைச்சர்!!!

2600 ஆண்டு பழமையான தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணம் பல்வேறு தொல்லியல் பொருட்கள் சிவகங்கை அருகேயுள்ள திருப்புவனத்தில் கண்டெடுக்கப் பட்டது.