பீட்டர் பாலுடன் இருந்த உறவு என்ன? வனிதா விஜயகுமார் விளக்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,May 02 2023]

சமீபத்தில் பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் பல ஊடகங்கள் நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் இறந்ததாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து வனிதா தனது விளக்கத்தை அளித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:

இதற்கு ரியாக்ட் செய்யலாமா? வேண்டாமா? என்பது குறித்த குழப்பமான சிந்தனை எனக்கு இருந்தது. நான் பீட்டர் பாலை அதிகாரபூர்வமாக திருமணம் செய்யவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மைதான். ஆனால் அதே ஆண்டு எங்கள் ரிலேஷன்ஷிப் முடிவுக்கு வந்தது.

நான் அவரது மனைவியும் இல்லை, அவர் எனது கணவரும் இல்லை. எனக்கு தற்போது கணவர் என்று யாரும் இல்லை. நான் சிங்கிள் தான். எனவே எனது கணவர் இறந்து விட்டார் என்ற செய்தியை தயவுசெய்து பரப்ப வேண்டாம். நான் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது எனது தாழ்மையான கோரிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வனிதா விஜயகுமார் பலமுறை தான் பீட்டர் பாலை திருமணம் செய்யவில்லை என்று கூறியிருந்த நிலையில் தற்போது அதனை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.