மகன் ஹீரோவானதை பெருமையுடன் அறிவித்த வனிதா விஜயகுமார்.. நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,July 25 2024]

நடிகை வனிதா விஜயகுமார் மகன் விஜய்ஸ்ரீ ஹரி நாயகனாக அறிமுகமாகும் படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் வனிதா விஜயகுமார் அதை நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

வனிதா விஜயகுமார் மற்றும் ஆகாஷ் தம்பதிக்கு பிறந்த விஜய்ஸ்ரீ ஹரி, பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் ’மாம்போ’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். கும்கி படத்தில் யானை முக்கிய கேரக்டரில் நடித்தது போல் இந்த படத்தில் சிங்கம் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதன் முக்கிய படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளதை அடுத்து நடிகை வனிதா விஜயகுமார் அதை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். என்னுடைய மகன் ஹீரோவானதை அடுத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைத்து மீடியாக்களும் பொதுமக்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும், விஜய் ஸ்ரீ என் மகன் என்பதை நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக் கொள்வேன், கடவுள் அவருக்கு அருள் புரிய வேண்டும்’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கும், எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வரும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் எனது நன்றி, இந்த போஸ்டரை பார்த்ததும் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது’ என்றும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.