'எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்': பீட்டர் பால் மரணத்திற்கு வனிதாவின் உருக்கமான பதிவு..!
- IndiaGlitz, [Sunday,April 30 2023]
நடிகை வனிதாவை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட பீட்டர் பால் நேற்று காலமானதை அடுத்து வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது. இது குறித்து பீட்டர் பால் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், தான் பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று வனிதா மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக பீட்டர் பால் காலமானார். அவரது மறைவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நீயே உனக்கு உதவி செய்து கொண்டால் தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். இந்த பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரங்களில் எல்லோரும் அவரவர் பாதையை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் சந்தித்த துயரங்கள் முடிவடைந்து தற்போது அமைதி அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதாக வருத்தப்படும் அதே நேரத்தில் தற்போது நீங்கள் அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.