கோட்-சூட், பாப்-கட்டிங்: ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறிய வனிதா: வைரல் புகைப்படங்கள்!
- IndiaGlitz, [Wednesday,June 01 2022]
நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட்-சூட், பாப்-கட்டிங் என ஆளே அடையாளம் தெரியாத வகையில் வித்தியாசமாக உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
விஜய்யின் ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார், அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் திரையுலகில் பிஸியான வனிதா, தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் வனிதா விஜயகுமார், அவ்வப்போது தான் நடிக்கும் புகைப்படங்கள் மற்றும் தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் வனிதா, கோட் சூட் மற்றும் பாப் கட்டிங் ஹேர்ஸ்டைலில் வித்தியாசமாக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து தங்களின் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.