காதல் கைவிடாது: அதிசயம் நடக்கும்: பீட்டர்பால் உடல்நிலை குறித்து வனிதா

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

நடிகை வனிதாவை திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர்பால் நேற்று திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை வனிதா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள டுவிட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’நேற்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. கடவுள் எங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக தான் சோதனையைக் கொடுத்து வருகிறார், என்றாலும் நிச்சயம் அதிசயம் நடக்கும். நான் கடவுளை மிகவும் நம்புகிறேன். எங்கள் காதல் வலிமையானது, அது எங்களை கைவிடாது. அவருக்காக நானும் எனக்காக அவரும் எப்போதும் இருப்போம்’என்று கூறியுள்ளார்

இதேபோல் இன்னொரு டுவீட்டில் ’திருமணம் என்பது சட்ட ரீதியான ஒரு அங்கீகாரம் அல்லது காகிதம் அல்ல, அது உணர்வு பூர்வமானது. உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் விஷயம்., சிலருக்கு வேண்டுமானால் திருமணம் மற்றும் விவாகரத்து வெறும் பேப்பர் ஆக இருக்கலாம்’ என்று கூறியுள்ளார்

அதேபோல் இன்னொரு டுவிட்டில் ’எனது அன்புக்குரிய பீட்டர்பால் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றி. அவர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். வாழ்க்கை மிகவும் குறுகியது. என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார். வனிதாவின் தொடர்ச்சியான இந்த டுவீட்டுக்கள் தற்போது வைரலாகி வருகிறது

More News

பாரில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கையைச் சேர்ந்த பிரபல நடிகை பியுமி ஹன்சமலி ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கங்கனா ரனாவத் நெற்றியில் ஏற்பட்ட ரத்தக்காயம்: வைரலாகும் புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் விஜய் இயக்கத்தில் 'தலைவி' என்ற திரைப்படத்தில் நடித்து வருபவருமான நடிகை கங்கனா ரனவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் காயம் பட்ட ஒரு புகைப்படத்தை

ரஜினியிடம் அரசியல் குறித்து பேசியதில்லை: பாஜகவில் இணைந்த அண்ணாமலை பேட்டி

நடிகர் ரஜினிகாந்திடம் அரசியல் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்றும் ஆன்மீகம் குறித்து மட்டுமே பேசி இருப்பதாகவும் அவரின் அரசியல் வருகைக்காக தான் காத்திருப்பதாகவும்

தனுஷ் பட வில்லன் நடிக்கும் 5 மொழி திரைப்படம்: டைட்டிலை வெளியிட்ட அஜித் பட வில்லன்

தனுஷ் நடித்த 'மாரி 2' என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினா தாமஸ் என்பது தெரிந்ததே.

திரையரங்குகள் திறப்பது குறித்து அதிர்ச்சி கருத்தை தெரிவித்த அமைச்சர்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை