என்னுடைய தல, தளபதி, சூப்பர் ஸ்டார் எல்லாமே இவர்தான்: 'பிக்பாஸ் 3' நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா, அந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்புக்கு உள்ளானார். ஒரு மணி நேர நிகழ்ச்சியில் அவர் 50 நிமிடம் பேசிக் கொண்டே இருப்பார். அது சில சமயம் பாசிட்டிவ் ஆகவும் பல சமயங்களில் நெகட்டிவ் ஆகவும் இருந்துள்ளது. வனிதாவின் பரபரப்பு காரணமாகவே அவர் மக்களால் ஓட்டு போடப்பட்டு வெளியேற்றபட்டாலும், மீண்டும் பிக்பாஸ் மனது வைத்து உள்ளே நுழைந்தார்.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்த புகைப்படத்தில் உள்ளவர்தான் என்னுடைய சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதி எல்லாமே' என்று கூறியுள்ளார். மேலும் இவர் எனது அப்பாவை போலவே இருப்பதாகவும் கூறியுள்ளார். வனிதா விஜயகுமார் பதிவு செய்துள்ள புகைப்படம் அவரது மகன் விஜய்ஸ்ரீஹரி என்பது குறிப்பிடத்தக்கது
வனிதா தனது மகன் குறித்து ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிய்ஹின்போது பலமுறை கூறியுள்ளார் என்றும் தெரிந்ததே. இருப்பினும் வனிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? என புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
விரைவில் அவர் சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
My #Thalapathy #Superstar #Thala #ulaganayagan my #everything #mylife my #vijaysrihari doesn't he look exactly like my papa #daddy pic.twitter.com/TJQyEN2rO3
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) December 15, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments