அஜித் குறித்து வனிதாவின் டுவீட்: ரசிகர்களின் ரியாக்சன்

சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை வனிதா திருமணம் செய்ததால் ஏற்பட்ட சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த திருமணம் குறித்து நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகை குட்டி பத்மினி, மற்றும் சூர்யா தேவி என்ற பெண் ஆகியோர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர். இவர்களுக்கு வனிதா பதிலடி கொடுத்து வந்தது மட்டுமன்றி இவர்கள் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வனிதா கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென டுவிட்டரில் இருந்து தான் விலகுவதாகவும் டுவிட்டரில் போராளிகளுடன் வாதம் செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் டுவிட்டரில் இணைந்து டுவிட்டுகளை பதிவு செய்தார்.

இந்த நிலையில் அஜித் திரையுலகில் நுழைந்து 28 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து அவரது ரசிகர்கள் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டு கொண்டாடி வரும் நிலையில் இதுகுறித்து வனிதா தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: அஜித்தின் வளர்ச்சி நம்ப முடியாதது ஆனால் உண்மை. நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில்தான் சினிமாவில் நுழைந்தோம். சினிமாவில் சிறந்ததையும் மோசமானதையும் பார்த்தோம்.

அஜித் அவர்கள் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர். நான் சந்தித்த மிக உண்மையான, எளிமையான, மனிதர்களில் ஒருவர் நீங்கள். கடவுள் உங்களுக்கு அனைத்து சிறப்புகளையும் கொடுப்பார். ஷாலுவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

வனிதாவின் இந்த டுவிட்டுக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்