அம்மா மஞ்சுளா பார்த்து பெருமைப்பட்ட புகைப்படங்கள்.. வனிதாவின் இளமைக்கால போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Tuesday,February 13 2024]

நடிகை வனிதா தனது தாயார் மஞ்சுளா உயிரோடு இருக்கும் போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து இந்த புகைப்படங்களை பார்த்து எனது அம்மா பெருமை பட்டார் என்று பதிவு செய்துள்ளார்.

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு நடிகை ஆக அறிமுகமானார். அதன் பிறகு ராஜ்கிரணின் ’மாணிக்கம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த நிலையில் திடீரென சில ஆண்டுகளாக அவர் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக திரையுலகிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் தற்போது அவர் மீண்டும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் வனிதா ஆக்டிவ்வாக இருந்து வரும் நிலையில் அவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது தாயார் மஞ்சுளா உயிரோடு இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் என சில புகைப்படங்களை வனிதா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். தனக்கு அப்போது 32 வயது என்றும், மூன்று குழந்தைகள் பெற்ற நிலையில் நான் எடை குறைத்ததை பார்த்து எனது அம்மா சந்தோசப்பட்டதாகவும் எனது அம்மாவை பெருமைப்படுத்தும் வகையில் இந்த புகைப்படங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ’மிஸ் யூ அம்மா’ என்றும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

More News

'அய்யா என்னை மன்னிச்சிடுங்க.. இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடிய திருடனின் கடிதம்..!

'காக்கா முட்டை' இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரொக்கம், நகைகள் மற்றும் விருதுகள் திருடு போன நிலையில்  அவற்றை திருடி சென்ற திருடன் தன்னை மன்னிக்குமாறு

கட்டணங்களை இப்படி மாற்றி அமைக்கலாமே.. திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் யோசனை..!

பொதுவாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் வருவதில்லை என்றும்  அதனால் சின்ன பட்ஜெட் படங்கள் நன்றாக இருந்தாலும் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு

ஜெயம் ரவியின் 'சைரன்'.. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!

 ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த 'சைரன்' என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள்

'கங்குவா'வுக்கு முன்னர் ரிலீஸ் ஆகும் சூர்யா படம்.. சூப்பர் தகவல்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்பட்டாலும்

4 புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படங்களை, ஸ்ட்ரீம் செய்யும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக 1 டிக்கெட் 4 படம் எனும், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் தற்போது நான்கு புதிய