முதல் டாஸ்க்கில் இருந்தே வெளியேறிய வனிதா: ஆரம்பித்ததா சண்டை சச்சரவு?
- IndiaGlitz, [Monday,January 31 2022]
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரம் கழித்துதான் சண்டை சச்சரவு தொடங்கும் என்ற நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே சண்டை தொடங்கிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை வெளியான முதல் புரமோ வீடியோவில் நாமினேஷன் படலம் குறித்த தகவலை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு முதல் டாஸ்க் அளிக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் நீங்கள் உங்களுக்குள் சில சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை தெரிந்து கொள்வதற்கும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறது என்று பிக்பாஸ் தெரிவிக்கின்றார்.
இந்த டாஸ்கின் ஒரு கேள்வியாக, ‘ஒருவரை பற்றி புரளி பேசி அவரிடமே நான் மாட்டிக் கொண்டதே இல்லை’ என்று சினேகன் ஒரு துண்டு சீட்டை வாசிக்கிறார். அந்த துண்டுச் சீட்டு கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வனிதா, ‘பிக்பாஸ் இந்த கேள்விக்கு பதில் உங்களுக்கே தெரியும், ஏன் உலகத்திற்கே தெரியும். இது சரியோ தவறோ இதை யார் முடிவு செய்வது? மக்கள்தான் முடிவு பண்ண வேண்டும், நீங்கள் கிடையாது’ என்று ஆவேசமாக கூறுகிறார்.
மேலும் ’இந்த டாஸ்க்கில் இருந்தே நான் வெளியேறுகிறேன்’ என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். முதல் நாள், முதல் டாஸ்க்கில் இருந்து வெளியேறி தனது ஆத்திரத்தை காட்டியுள்ள வனிதாவால் பிக்பாஸ் வீட்டில் சண்டை சச்சரவு மற்றும் பிரச்சினை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day1 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/YsKa5zWtl2
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 31, 2022