விஜய்யின் க்ரீன் இந்தியா சேலஞ்ச்: பாஜக பெண் பிரமுகர் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் தனது பிறந்தநாளின் போது தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை நட்டு, கிரீன் இந்தியா சேலஞ்சை விஜய்க்கு விடுத்தார் என்பதும் ,அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு தளபதி விஜய் அவர்கள் நேற்று தனது வீட்டு தோட்டத்தில் செடிகளை நாட்டார் என்பதும் தெரிந்ததே.
மகேஷ் பாபு மற்றும் விஜய் செய்த இந்த கிரீன் இந்தியா சேலஞ்ச் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதும் இதனையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் வீடுகளில் செடிகளை நட்டதாக செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தென்னிந்திய திரையுலகில் ஜாம்பவான்களான மகேஷ் பாபு மற்றும் விஜய்யின் இந்த சேலஞ்சுக்கு திரை உலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டு தெரிவித்து வந்தனர். அந்த வகையில் தற்போது தமிழக பாஜகவின் பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இளைய தலைமுறைக்கு பசுமையை பற்றி கூற விழையும் நடிகர்கள் விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள். கிரீன் இந்தியா சேலஞ்சை இரு நடிகர்களும் மிகப்பெரிய அளவில் தங்களுடைய ரசிகர்களுக்கு கொண்டு செல்கின்றனர் என்பதும் இதனால் நாட்டின் சுற்றுச்சூழல் மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வானதி ஸ்ரீனிவாசனின் இந்த பாராட்டை அடுத்து விஜய் மற்றும் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்
இளைய தலைமுறைக்கு "பசுமை" யைப்பற்றி கூற விழையும் நடிகர்கள்
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 11, 2020
திரு.@actorvijay
& திரு.@urstrulyMahesh
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Appreciate the actors for taking the #GreenIndiaChallenge , please motivate ur fans and followers to bring a change in our environment. pic.twitter.com/90T6pyD8p8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com