பிக்பாஸ் லவ் ஜோடியை 'நாய்க்காதல்' என்று விமர்சித்தாரா வனிதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உலாவி வரும் நிலையில் அவர்களை ‘நாய்க்காதல்’ என்று வனிதா விமர்சனம் செய்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகிக் கொள்வதாக அறிவித்ததை அடுத்து வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வனிதாவும் விலகினார்., பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகும், அந்த நிகழ்ச்சி குறித்து தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது வனிதா பதிவு செய்து வருகிறார் என்பதும் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே காதலித்து பிரிந்த அபிராமி மற்றும் நிரூப் போட்டியாளர்களாக இருக்கும் நிலையில் தற்போது அபிராமி மற்றும் பாலா இடையே ஒரு காதல் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் ஸ்மோக்கிங் ரூமில் காட்டிய நெருக்கம் மற்றும் உரையாடல்களை பார்க்கும்போது இவர்கள் உண்மையான காதலர்கள் என்று சிலரும், அபிராமியை பாலா பயன்படுத்துகிறார் என்று சிலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாலா-அபிராமி காதல் குறித்து வனிதாவிடம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்ட போது நாய் மற்றும் காதல் எமோஜியை பதிவு செய்து ’இதை தவிர நான் வேறு என்ன சொல்ல இந்த காதல் குறித்து’ என்று வனிதா பதிவு செய்துள்ளார். அப்படி என்றால் பாலா-அபிராமி காதலை அவர் ‘நாய்க்காதல்’ என்று விமர்சித்தாரா? என்ற கேள்வியை தற்போது நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com