கமல் சார் இன்னும் ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கணும்: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வனிதா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வுமன் சேப்டி குறித்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறிய போது கமல்ஹாசனும் சேர்ந்து சொல்லி ஆதரவு அளித்திருக்கணும் என்றும், ஆனால் அவர் சொல்லவில்லை என்று வனிதா கூறிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நமது யூடியூப் சேனலில் நடிகை வனிதா தினமும் விமர்சனம் செய்து வருகிறார். அந்த விமர்சனத்தில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரம் போட்டியாளர்கள் எடுத்த முடிவு, தன்னுடைய முடிவு அல்ல என்று கமல் கூறினார். ஆனால் அவர் தன்னுடைய முடிவும் என்று ஸ்ட்ராங்காக சொல்லி இருக்க வேண்டும், அதை சொல்லியிருந்தால் நான் அவரை பாராட்டியிருப்பேன். ஆனால் அதை அவர் சொல்லாமல் நழுவி விட்டார்
மேலும் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பதால் அவருக்கு ஒரு பொறுப்புணர்ச்சி இருக்கிறது. எனவே பாதிக்கப்பட்ட பெண்களுடன் சேர்ந்து அவரும் குரல் கொடுத்திருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக இந்த முடிவை நானும் சேர்ந்து எடுத்தேன் என்றுதான் கமல் சார் சொல்லி இருந்தால் அவர் மீது எனக்கு மரியாதை அதிகரித்து இருக்கும் அவரது கட்சிக்கும் நான் வாக்களித்திருப்பேன்.
ஆனால் அவர் ’நான் அதை செய்யவில்லை என தன்னுடைய பெயரை சமூக வலைதள பயனாளர்களிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பித்து விட்டார் என்று வனிதா கூறினார். இதனை அடுத்து தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்து கொண்டே வந்த வனிதா ஒரு கட்டத்தில் திடீரென நான் பேசிக் கொண்டிருக்கும் போது நீ எதற்கு சிரிக்கிறாய்? நீ முதலில் இந்த இடத்தை விட்டு வெளியேறு என தன்னிடம் பேசி கொண்டிருந்தவரை ரெட் கார்டு கொடுத்து அனுப்பினார்.
இந்த நிகழ்ச்சி ஒரு விமர்சன நிகழ்ச்சி, கேள்வி பதில் நிகழ்ச்சி அல்ல, இதில் நான் தான் பேச வேண்டும், நான் தான் விமர்சனம் செய்ய வேண்டும், என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com