வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் அதிரடி காட்டும் வனிதா: அதிர்ச்சியில் பிக்பாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் வனிதா இருந்தவரை வீட்டில் ஒரே சண்டையும் சச்சரவுமாகவும் இன்னொருபுறம் கலகலப்பாகவும் இருந்தது. ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் வீடு கிட்டத்தட்ட அமைதியாகிவிட்டது. ஒரு பக்கம் கவினின் காதல் காட்சிகளும், இன்னொரு பக்கம் மீராவின் நரித்தனமும் ஓரளவு சுவாரசியமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதுவும் போர் அடிக்க தொடங்கி விட்டது
இந்த நிலையில் வனிதா இல்லாததை தற்போது பார்வையாளர்கள் ஒரு குறையாக உணர்ந்து வருகிறார்கள். மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா, எப்படி வீட்டிற்குள் இருக்கும் போது அடங்காமல் இருந்தாரோ, அதேபோல் பிக்பாஸ் விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு தன் இஷ்டம்போல் பேட்டி கொடுத்து வருகிறார். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் உள்ள பல ரகசியங்களை உடைத்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் இரவு 11 மணிக்கு விளக்கை அணைப்பது போல் பார்வையாளர்களுக்கு காட்டப்படும். ஆனால் உண்மையில் விளக்குகள் அணைத்த பின்னர் மீண்டும் விளக்குகளை ஆன் செய்கின்றார்கள் என்ற உண்மையை போட்டு உடைத்தார் வனிதா
அதுமட்டுமின்றி போட்டியாளர்கள் ஒரு வாரம் மட்டுமே உண்மையாக இருந்ததாகவும் அதற்கு பின் அனைவரும் கேமிரா முன் போலியாக நடித்துக் கொண்டிருப்பதாகவும் பேட்டிகளில் அவர் கூறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் தங்களுக்கு பெரும் அனுபவங்கள் கிடைத்ததாக முந்தைய போட்டியாளர்கள் கூறியது அனைத்தும் பொய் என்றும், அங்கு தனக்கு எந்தவித புதுவித அனுபவமும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். இப்படியே போனால் இன்னும் என்னென்ன உண்மைகளை அவர் உடைக்கப்போகிறாரோ என்ற பயம் பிக்பாஸ் குழுவினர்களுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் வனிதாவின் வாயை அடைக்க மீண்டும் அவரை ஒயில்கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பலாமா? என்ற யோசனையும் பிக்பாஸ் குழுவினர்களிடம் உள்ளதாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments