ஒரு கோடி ரூபாய் கேட்கிறாரா பீட்டர்பால் முதல் மனைவி: வனிதா அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Sunday,June 28 2020]
நடிகை வனிதா நேற்று மாலை சென்னையில் உள்ள சர்ச் ஒன்றில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பால் அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.
திருமணம் முடிந்து ஒரு நாள் கூட முழுமையாக முடியாத நிலையில் திடீரென பீட்டரின் முதல் மனைவி இன்று காலை சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் தனது கணவர் பீட்டர்பால், கடந்த 7 வருடமாக பிரிந்து வாழ்வதாகவும் தனக்கு விவாகரத்து அளிப்பதற்கு முன்னரே அவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வனிதா கூறியபோது, ‘இந்த திருமணத்தில் என்னுடைய பக்கம் இருந்து தான் பிரச்சினை வரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் பீட்டர்பால் தரப்பில் பிரச்சினை வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பீட்டரின் முதல் மனைவி கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றார். அவர் தனக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்பதை மனதில் வைத்துதான் இந்த புகாரை கொடுத்துள்ளார். அவ்வளவு பணம் கொடுக்கும் அளவுக்கு என்னிடமோ அல்லது அவரிடம் பணம் இல்லை. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார். வனிதாவின் இந்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.