பிக்பாஸ் அல்டிமேட்: வனிதா வெளியேற ரம்யா கிருஷ்ணன் காரணமா? 

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வனிதா சமீபத்தில் வெளியேறிய நிலையில் அவர் வெளியேறுவதற்கு ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்று வதந்திகள் வெளியானது. இந்த வதந்திகளுக்கு பதிலடி தரும் வகையில் வனிதா தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் வெளியேறியவுடன் அவருக்கு பதிலாக அர்ஜுன், ரம்யா கிருஷ்ணன் அல்லது சிம்பு ஆகிய மூவரில் ஒருவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பதால்தான் வனிதா வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.

இந்த வதந்திக்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா, ‘ரம்யா கிருஷ்ணன் வருவதன் காரணமாக நான் இதில் இருந்து விலகவில்லை. பொய்யான தகவலை பரப்ப வேண்டாம். என்னுடைய உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டுதான் நான் வெளியேறும் முடிவை எடுத்தேன். என்னுடைய நிலையை புரிந்துகொண்டு உதவிய ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கும் பிக்பாஸ் அல்டிமேட் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எனது நன்றி என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி நடந்தபோது வனிதாவின் டான்ஸ் குறித்து நடுவர்களில் ஒருவராக இருந்த ரம்யா கிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் அதனால் வனிதா மற்றும் ரம்யாகிருஷ்ணன் இடையே மோதல் ஏற்பட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே.

More News

உனக்கு மட்டும் எப்படி இது நடக்குது? அஜித்துக்கு கேள்வி கேட்ட குஷ்பு!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு பீடிக்காக தந்தையையே கொன்ற கொடூர மகன்… அதிர்ச்சி சம்பவம்!

அசாம் மாநிலத்தில் கூடுதலாக ஒரு பீடியை தரமறுத்த தந்தையை

ஷங்கர் திரைப்படத்தில் நடிகை அஞ்சலி வில்லியாக நடிக்கிறாரா? வைரலாகும் தகவல்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை அஞ்சலி பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தில் இணைந்து

நடிகை பிரணிதாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த கவுரவம்!

தமிழ் மற்றும் கன்னட மொழி சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் பிரணிதா சுபாஷுவிற்கு ஐக்கிய அரபு அமீரகம்

உக்ரைனில் வீசப்படும் குண்டுமழை… பதற்றத்தின் உச்சக்கட்டத்தில் உலக நாடுகள்!

பழைய சோவியத் நாடுகளுள் ஒன்றான உக்ரைன் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான “நேட்டா“வுடன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து