அம்மா.. நான் உனக்கு 10000% ஆதரவாக இருக்கிறேன்: வனிதா மகளின் நெகழ்ச்சி பதிவு 

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை வரும் 27ஆம் தேதி செய்ய இருப்பதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இரண்டு முறை திருமணமாகி விவகாரத்து பெற்ற வனிதா எடுத்துள்ள இந்த முடிவுக்கு பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்தாலும் ஒருசிலர் சமூக வலைதளங்களில் ஒருசில சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் வனிதாவின் மகள் ஜோவிகா தனது தாயாரின் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: அம்மா ஐ லவ் யூ. நான் உனக்கு 10000 சதவீதம் ஆதரவாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. உன்னை நான் நன்கு அறிவேன். நீ ஒரு கடின உழைப்பாளி. நேர்மையானவர். அருமையான உற்சாகப்படுத்த கூடியவள். அன்பு தருபவள். நான் எப்போதும் இதை மறுக்க மாட்டேன். மற்ற எல்லோரையும் போல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உனக்கு தகுதி இருக்கிறது. எல்லோருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோரும் மேஜிக்கை நம்புவதில்லை. அதே போல் எல்லோரும் காதலை நம்புவதில்லை. ஆனால் நீ நம்புவாய். எனவேதான் அதன் பலன் உனக்கு இப்போது கிடைத்திருக்கிறது. என்று பதிவு செய்துள்ளார்.

வனிதா மகள் ஜோவிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 

View this post on Instagram

I'm counting my blessings

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on Jun 17, 2020 at 11:41am PDT