முதல்ல இதை நிறுத்து: யாஷிகாவுக்கு வனிதா கூறிய அறிவுரை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த கார் விபத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்தும், தனது உயிர் தோழி பவானி பலியானது குறித்தும் மிகவும் உருக்கமாக அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் நடிகை யாஷிகா பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாஷிகாவின் இந்த பதிவுக்கு பல நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் ஒருசில ஆறுதல் கமெண்ட்ஸ்களும் பதிவான நிலையில் நடிகை வனிதா விஜயகுமார், இந்த பதிவுக்கு ’முதலில் இதை நிறுத்தவும்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கூறியபோது ’விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். அதனால்தான் அதற்கு விப்த்து என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு எல்லாமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதை ஒருவரும் மாற்ற முடியாது. மேலும் நீ பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கின்றாய். முதலில் உன்னை நீயே திட்டிக் கொள்வதை நிறுத்திக்கொள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த கோரமான விபத்தில் இருந்து நீ தப்பியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கடவுள் கண்டிப்பாக உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.
தனது தோழியின் மறைவுக்கு தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்து வரும் யாஷிகாவுக்கு வனிதாவின் இந்த பதிவு நிச்சயம் ஆறுதலாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com