காபி எனக்கு மட்டும் தான், யாருக்கும் கிடையாது: அராஜகம் செய்யும் வனிதாவை தட்டி கேட்கும் அபிராமி!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா முதல் நாளே தனக்கு காபித்தூள் வரவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தார் என்பதும் அதன் பின்னர் டாஸ்க் ஜெயித்த பின்னர் பிக்பாஸ் காபி தூளை அனுப்பினார் என்பதும் இந்த நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் காபி பொடி வந்தவுடன் அதை தன்னுடைய கண்ட்ரோலில் எடுத்துக்கொண்ட வனிதா, அதை யாருக்கும் தர மாட்டேன் என்று கூறுவதுடன், ரெகுலராக டீ குடிப்பவர்களுக்கு ஒருவேளை மட்டுமே காபி கிடைக்கும் என்றும் காபித்தூள் என்னுடைய கண்ட்ரோலில் மட்டும் தான் என்றும் கூறிய அவர் காபி தூளை எடுத்து கொண்டு தன்னுடைய டிராயரில் வைத்து கொண்டார். மேலும் எனக்கு போக மிச்சம் மீதி இருந்தால் நீங்கள் எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியதை கேட்டவுடன் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்த போது அபிராமி மட்டும் ஆத்திரம் அடைந்தார்.

உடனே அவருடன் போய் சண்டை போடுகிறார். இது உங்களுடைய பர்சனல் பிராப்பர்ட்டி இல்லை என்றும் எல்லோரும் டாஸ்க் செய்துதான் இந்த காப்பி தூளை வாங்கி இருக்கிறோம் என்றும் கூறினார். அதற்கு வனிதா, ‘எங்கள் டீம் தான் டாஸ்க்கில் ஜெயித்தது, எனவே எங்களுக்கு தான் இந்த காப்பி என்று கூறுகிறார். அதற்கு அபிராமி ’நாங்கள் காபி வேண்டும் என்று கூறாவிட்டால் காப்பி வீட்டிற்கு வந்து இருக்காது’ என்று கூற, அதற்கு வனிதா ’ஏன் இப்படி கேவலமாக நடந்து கொள்கிறாய்? என்று வனிதா கூற அதற்கு அபிராமி ’நீங்கள் செய்வது தான் கேவலமாக இருக்கிறது’ என்று கூறுகிறா.ர் இதனால் ஆத்திரமடைந்த வனிதா, ‘காப்பித்தூள் பாட்டிலை தூக்கி போட்டுவிட்டு ஆத்திரமாக செல்லும் காட்சி உடன் ப்ரோமோ வீடியோ முடிவடைந்துள்ளது.

More News

'புஷ்பா 2' படத்தின் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட பகத் பாசில்!

சமீபத்தில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பாக பாலிவுட் திரையுலகில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது

கள் குடித்து ஒருவர்பின் ஒருவராக 5 பேர் உயிரிழந்த சோகம்!

ஆந்திர மாநிலத்தில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளைக் குடித்து பழங்குடியினர் 5

சுசீந்திரனின் அடுத்த படத்தின் டைட்டில் மாற்றம் ஏன்? அவரே கொடுத்த விளக்கம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கியுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 இந்திய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு… வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டி?

3 ஒருநாள், 3 டி20 போட்டிக்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்தியாவிற்கு வருகை

சிம்பு பிறந்த நாளில் டபுள் ட்ரீட் கொடுத்த 'பத்து தல' படக்குழு!

நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.