வனிதாவின் பதிலடியும் சிவாஜி பேரனின் விளக்கமும்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவுக்கு பிக்பாஸ் இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் அவரது வாய், அவரது வாய்ப்பை பறித்துகொண்டது. எனவே அவர் டைட்டிலை ஜெயிக்கும் தகுதியிருந்தும் இரண்டு முறையும் வெளியேறினார்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரனும், பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் சுஜாவின் கணவருமான ஷிவகுமார், வனிதா குறித்து தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்த ஒரு கருத்துக்கு வனிதா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ‘ஷிவகுமார் உனது அம்மாவை எனக்கு நன்றாக தெரியும். உனது அப்பா, எங்கள் குடும்பத்தில் ஒருவர். நீ பதிவு செய்திருக்கும் பிக்பாஸ் குறித்த கமெண்ட்டுக்களை உனது தாயார் இருந்திருந்தால் நிச்சயம் ரசித்திருக்க மாட்டார். தற்போது நீ ஒரு குழந்தையின் தகப்பன். எனவே பொறுப்புடன் கருத்துக்களை பதிவு செய்யவும் என்று வனிதா குறிப்பிட்டிருந்தார்.
வனிதாவின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்த ஷிவகுமார், ‘நன்றி அக்கா. நான் ஒரு மணி நேரம் நிகழ்ச்சியை மட்டுமே பார்த்து எனது கருத்துக்களை தெரிவிக்கின்றேன். 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என் தாயார் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை நான் அறிவேன். இதனை நீங்கள் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. எனது பார்வையில் கூறப்பட்ட கருத்துக்களே அவை. அதே சமயம் உங்களுக்கு நேரமிருந்தால் நான் பதிவு செய்த மற்ற பதிவுகளையும் பாருங்கள். எனது சமீபத்தில் டுவீட் ஒன்று உங்களுடைய தாய்மையை போற்றியது குறித்தாக இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
(P2)Please read all my tweets if u have time or I shall screenshot u & send it.Even my last tweet about u was a big love to u as a mother & supportive towards u. Im still kalachifying for what that "Angel" Robert still doing?? garnering publicity thru u, but not me ?? Lots of ??
— Shiva Kumarr (@Shivakumarr222) September 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout