சாக்சிக்கு பொங்கல் வைத்த வனிதா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஆரம்பத்தில் 'ஆனந்தம்' மம்முட்டி குடும்பம் போல் ஒற்றுமையாக இருப்பதும் போகப்போக 'சம்சாரம் அது மின்சாரம்' விசு குடும்பம் போல் ரணகளமாவது வழக்கமான ஒன்றே.
இந்த நிலையில் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே பாத்திமாபாபு மற்றும் சேரன் இடையே ஒரு சிறு பிணக்கு ஏற்பட்ட நிலையில் இன்றைய புரமோவில் வனிதாவும், சாக்சியும் மோதிக்கொள்வது போல் உள்ளது.
காலையில் சாப்பிடும் பொங்கல் தனக்கு வேண்டாம் என சாக்சி கூற, அந்த பொங்கலை செய்த வனிதா அதற்கு கோபம் அடைந்து எகிற, இன்றைய நிகழ்ச்சியில் சாக்சிக்கு வனிதா பொங்கல் வைத்துவிட்டதுபோல் தெரிகிறது. 'பொங்கல் பிடிக்காதா? அல்லது ஒத்துக்காதா? ஏன் பொங்கல் பிடிக்காதுன்னு சொல்ற? என்று வனிதா கேட்கும் தோரணையே சாக்சியை மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களையும் அதிர்ச்சியடைய செய்கிறது.
இந்த பிரச்சனையால் பிக்பாஸ் குடும்பம் வனிதா மற்றும் சாக்சி என இரண்டு குருப்புகளை பிரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போகப்போக வனிதா இன்னும் எத்தனை பேருக்கு பொங்கல் வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/BW99yAZfvm
— Vijay Television (@vijaytelevision) June 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com