வாணி போஜனின் அடுத்த படம்: டைட்டில் மற்றும் கதை குறித்த தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
’தெய்வமகள்’ உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை வாணி போஜன், ’ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் டைட்டில் ’தாழ் திறவா’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பரணி சேகரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். இது குறித்து அவர் கூறியபோது ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகிய இருவரும் இந்த படத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாக நடிக்கின்றனர். இந்த படம் பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள ஒரு பிரச்சனையை தீர்த்து வைப்பதே கதை என்றும் வழக்கமான திரில்லர் படம் போல் இருக்காமல் இது வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார் .
மேலும் வாணிபோஜன் கேரக்டர் மிகவும் வித்தியாசமானது என்றும் அவரது கேரக்டரை சுற்றியே இந்த படத்தின் முழு கதையும் அமைந்துள்ளது என்றும் கூறினார். லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவை மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை வாணி போஜன் கூறியபோது ’எனக்கு இந்த படத்தின் கேரக்டரை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நான் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இயக்குநர் சுரேஷ் மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to launch the intense title look of #ThazhThiravaa,*ing @aadhavkk & @vanibhojanoffl.
— Andrea Jeremiah (@andrea_jeremiah) August 21, 2020
Best wishes to the entire team??@Barmanpictures @baranisekaran @Subbu6panchu@sureshmenonnew @manikndaneditor@boazDs @DhayaSandy @mugeshsharmaa @soundrprodctn @nxtgen_studio @proyuvraaj pic.twitter.com/1WZlrtJS5g
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments