சூர்யா-ரம்யா பாண்டியன் படத்தில் இணைந்த பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகை ஒருவரும் இணைந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது
சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் அரிசில்மூர்த்தி என்பவர் இயக்கும் திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த செய்தி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரம்யா பாண்டியன் ஒப்பந்தமான முதல் படம் இது என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் இந்த பூஜையில் பிரபல நடிகை வாணி போஜன் கலந்து கொண்டார். இவர் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’, ‘டிரிப்பிள்ஸ்’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். வாணிபோஜன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தொடர்ச்சியாக ஒரு மாதம் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. ரம்யா பாண்டியன் மற்றும் வாணிபோஜன் ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்கவிருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
With all your wishes and love, shoot for #ProductionNo14 begins today!@Suriya_offl @rajsekarpandian @arisilmoorthy @mynnasukumar @krishoffl @MithunManick @Ramyapandian6 @vanibhojanoffl @muji004art @SivasSaravanan @gopalbalaji #VinodhiniPandian @SakthiFilmFctry @proyuvraaj pic.twitter.com/N4loY5GPxu
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 31, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com