தேர்தல் 2019: நடிகை ரோஜாவுடன் மோதும் விஜயகாந்த் பட நடிகை?

  • IndiaGlitz, [Monday,March 18 2019]

நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது,. இதற்காக அம்மாநில அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று 175 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.

இந்த வேட்பாளர் பட்டியலில் நகரி தொகுதியில் மீண்டும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் சார்பில் நடிகை ரோஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் ரோஜாவுக்கு நல்ல பெயர் இருப்பதால் அவர் மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரோஜாவை எதிர்த்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி நடிகை வாணிவிஸ்வநாத்தை நகரி தொகுதியின் வேட்பாளராக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளர் பட்டியல் வந்தபின்னரே இந்த தகவல் உறுதி செய்யப்படும்.

நடிகை வாணி விஸ்வநாத், விஜய்காந்த் நடித்த 'நல்லவன்', 'பூந்தோட்ட காவல்காரன் உள்பட ஒருசில தமிழ்ப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

திமுகவில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர்

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது  பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். 

கமல் கட்சியின் முக்கிய நிர்வாகி திடீர் விலகல்! நடிகையுடன் கருத்துவேறுபாடு காரணமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் என்பவர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தேமுதிகவின் 4 தொகுதி வேட்பாளர்கள் இவர்கள்தான்!

அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்புக்கு பின்னர் இணைந்த தேமுதிக, 4 தொகுதிகளை மட்டும் வேண்டா வெறுப்புடனும் வேறு வழியின்றியும் பெற்றது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

'மிஸ்டர் லோக்கல்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

எங்களின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின்: முன்னாள் மத்திய அமைச்சர் டுவீட்

பாராளுமன்றத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகிவிட்டனர்.