close
Choose your channels

சிங்கப்பூர் குடிமகன், பைலட்டை திருமணம் செய்ய போகும் 'வாணி ராணி' சீரியல் நடிகை..!

Sunday, September 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராதிகா நடித்த 'வாணி ராணி' உள்பட சில சீரியல்களில் நடித்த நடிகை, சிங்கப்பூர் குடிமகன் பைலட்டை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகை சாரா என்ற ஜெனிப்ரியா. 'தமிழ் படம் 2' உள்பட சில படங்களிலும் நடித்த நிலையில், ஒரு கட்டத்தில் அவர் மேக்கப் ஸ்டுடியோ தொடங்கினார். பிக் பாஸ் ஜூலி உள்பட பிரபலங்களுக்கு மேக்கப் செய்து கொண்டிருப்பவரும் இவரே. மேலும், அவர் மேக்கப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சாராவுக்கும் சிங்கப்பூர் குடிமகன், சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றுள்ள துநேசன் என்பவருக்கும் திருமணம் உறுதியாகியுள்ளது. நேற்று நடந்த நலங்கு நிகழ்ச்சியில் சில சீரியல் நடிகைகளும் கலந்து கொண்டனர்.

தனது திருமணம் குறித்து கூறிய சாரா, ‘இது பெரியவர்கள் ஏற்பாடு செய்த திருமணம் என்றும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பைலட்டாக தனது வருங்கால கணவர் இருப்பதாகவும் கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் செட்டில் ஆக இருப்பதாகவும், அங்கேயே தனது மேக்கப் நிலையத்தை தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார். ஒருவேளை சினிமா அல்லது சீரியல் வாய்ப்புகள் வந்தால், தனது கணவரின் அனுமதியுடன் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

துநேசன் - சாரா திருமணம் நவம்பர் 8ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், வரவேற்பு நவம்பர் 11ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், இரண்டுமே சிங்கப்பூரில் தான் நடைபெற இருப்பதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment