'வாணி ராணி' டிம்பிள் வீடு இதுதான்.. நீலிமா ராணி பதிவு செய்த எமோஷனல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’வாணி ராணி’ சீரியலில் டிம்பிள் என்ற கேரக்டரில் நடித்த நடிகை நீலிமா ராணி, ஏழு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ’வாணி ராணி’ படப்பிடிப்பு நடந்த வீட்டிற்கு சென்று எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
'வாணி ராணி’ வீட்டிற்கு மீண்டும் 7 ஆண்டுகளுக்கு பின் நான் வருகை தந்துள்ளேன், 7 வருடத்திற்கு பிறகு தற்போது ’வாணி ராணி’ டிம்பிள் வீட்டிற்கு ’வானத்தைப்போல’ சீரியல் படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். ’வாணி ராணி’ டிம்பிள் வீடு எவ்வளவு அழகாக தயாராகிக் கொண்டிருப்பதை பாருங்கள். இந்த வீட்டை நான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறேன். இதை பார்க்கும் போது எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது இந்த வீட்டை மீண்டும் பார்ப்பதற்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறது. ஏனென்றால் எனக்கு ’வாணி ராணி’ சீரியலில் முதல் ஷாட் இந்த வீட்டில் தான் எடுக்கப்பட்டது. என்னை பெண் பார்க்கும் காட்சி இந்த வீட்டில் தான் படமாக்கப்பட்டது. எனவே இந்த வீடு எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த வீட்டுக்கு நான் மீண்டும் வருகை தருவது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த இடத்தில் எங்களுக்கு நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் நடந்து உள்ளன, இந்த வீடு தற்போது மாறப்போகிறது, எனவே அதற்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்து வீடியோ எடுத்து உங்களுக்கு பகிர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று நீலிமா ராணி அந்த வீடியோவில் எமோஷனலாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments