'வாணி ராணி' டிம்பிள் வீடு இதுதான்.. நீலிமா ராணி பதிவு செய்த எமோஷனல் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,July 01 2024]

’வாணி ராணி’ சீரியலில் டிம்பிள் என்ற கேரக்டரில் நடித்த நடிகை நீலிமா ராணி, ஏழு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ’வாணி ராணி’ படப்பிடிப்பு நடந்த வீட்டிற்கு சென்று எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

'வாணி ராணி’ வீட்டிற்கு மீண்டும் 7 ஆண்டுகளுக்கு பின் நான் வருகை தந்துள்ளேன், 7 வருடத்திற்கு பிறகு தற்போது ’வாணி ராணி’ டிம்பிள் வீட்டிற்கு ’வானத்தைப்போல’ சீரியல் படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். ’வாணி ராணி’ டிம்பிள் வீடு எவ்வளவு அழகாக தயாராகிக் கொண்டிருப்பதை பாருங்கள். இந்த வீட்டை நான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறேன். இதை பார்க்கும் போது எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது இந்த வீட்டை மீண்டும் பார்ப்பதற்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறது. ஏனென்றால் எனக்கு ’வாணி ராணி’ சீரியலில் முதல் ஷாட் இந்த வீட்டில் தான் எடுக்கப்பட்டது. என்னை பெண் பார்க்கும் காட்சி இந்த வீட்டில் தான் படமாக்கப்பட்டது. எனவே இந்த வீடு எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த வீட்டுக்கு நான் மீண்டும் வருகை தருவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த இடத்தில் எங்களுக்கு நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் நடந்து உள்ளன, இந்த வீடு தற்போது மாறப்போகிறது, எனவே அதற்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்து வீடியோ எடுத்து உங்களுக்கு பகிர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று நீலிமா ராணி அந்த வீடியோவில் எமோஷனலாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

 

More News

காதல் மனைவியை கட்டிப்பிடித்து போஸ்.. பிரேம்ஜி - இந்துவின் ஹனிமூன் புகைப்படங்கள் வைரல்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிலையில் தற்போது பிரேம்ஜி - இந்து ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் அவர்களது இன்ஸ்டாகிராம்

சன் டிவியில் விரைவில் புதிய சீரியல்.. ஹீரோயின் இந்த பிரபலமா?

சன் டிவியில் அவ்வப்போது புதிய சீரியல்கள் ஆரம்பமாகி கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புதிய சீரியல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, புரமோ வீடியோ வெளியாகி இருப்பதை

திருமணமான ஒரே வாரத்தில் மீண்டும் மருத்துவமனை சென்ற சோனாக்‌ஷி சின்ஹா: ரஜினிகாந்த் அதிர்ச்சி..!

நடிகை சோனாக்‌ஷி சின்ஹாகாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் வெளியானது

'விடாமுயற்சி' படத்தில் த்ரிஷாவுக்கு என்ன கேரக்டர்? சுரேஷ் சந்திரா வெளியிட்ட ரகசியம்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சுரேஷ் சந்திரா, இந்த படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு என்ன கேரக்டர் என்பதை குறித்த

'விடாமுயற்சி' படத்தின் மாஸ் ஃப்ர்ஸ்ட் லுக்.. அஜித் என்ன செய்கிறார் பாருங்கள்..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவு 7.03 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர்