'மைக்கேல்' பட நாயகி மாற்றம்: வாணி போஜனுக்கு பதில் டிவி சீரியல் நடிகை

  • IndiaGlitz, [Saturday,June 22 2019]

இன்றைய சூழ்நிலையில் 'மைக்கேல்' என்றால் அனைவருக்கும் 'பிகில் பட விஜய் கேரக்டர் தான் ஞாபகம் வரும். ஆனால் 'பர்மா' என்ற படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் தற்போது 'என் 4' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். லோகேஷ் குமார் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார். இவர் 'My Son is Gay' என்ற குறும்படத்தை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க பிரபல டிவி சீரியல் நடிகை வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் வாணிபோஜனால் படக்குழுவினர் கேட்கும் தேதிகளை கொடுக்க முடியாததால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். எனவே தற்போது அவருக்கு பதிலாக சரண்யா என்ற நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். இவரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை தான். இவர் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அனுபமா குமார், அபிஷேக், வடிவுக்கரசி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிகிறது.

More News

பிகில் மூன்றாவது லுக்: தீப்பொறிகளுக்கு நடுவில் மைக்கேல்

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட்லுக் நேற்று வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள் இவர்கள் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அதில் கலந்து கொண்ட ஓவியா, ஹரிஷ் கல்யாண், ஆரவ், உள்பட சில போட்டியாளர்கள்

ஓவியாவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவிருக்கும் நிலையில் பிக்பாஸ் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஓவியாகத்தான் இருக்கும்

'பிகில்' படத்தின் அடுத்த அப்டேட்: அள்ளி வழங்கும் அர்ச்சனா

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஒரே ஒரு அப்டேட்டை கேட்டு விஜய் ரசிகர்கள் அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கடந்த வாரம் வரை கெஞ்சி கொண்டிருந்தனர்.

மீம் கிரியேட்டர்ஸ்களை கூவிக்கூவி அழைத்த பிக்பாஸ் கமல்!

தொலைக்காட்சி நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவுள்ளது. மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில்