நீட் தேர்வால் வரும் பிரச்சனைக்கு குரல் கொடுத்த வாணி போஜன்.

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆகி மேலும் ஜெயா டிவியில் மாயா மற்றும் சன் தொலைக்காட்சியில் தெய்வம்கள் சீரியலில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த நம் சின்னத்திரை நடிகை வாணி போஜன் அவர்கள் சமீபத்தில் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,

அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார்.இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார்.கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் மூன்று ஆண்டுகள் பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.மாடலிங் மூலம் வாய்ப்பு கிடைத்து சின்னத்திரையில் களம் பதித்த இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார்.

தமிழில் ஒரு இரவு படம்,அதிகாரம் 79 மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.பெண்களை மையமாக கொண்டு பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகை வாணி போஜன் 2014ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான சன் குடும்ப விருதை பெற்றார்.அதுமட்டுமில்லாமல் 2018ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கலாட்டா நட்சத்திர தொலைக்காட்சி விருதை பெற்றுள்ளார்.

செங்கலம் திரைப்படத்தில் ஒரு அதிகாரம் மற்றும் வீரம் மிக்க அரசியல் பெண்ணாக நடித்து அசத்தினார்.இதற்கு முன்பு பார்த்ததை காட்டிலும் ஒரு புதிதான அரசியல் விவாதம் மற்றும் ஒரு திறம்மிக்க பெண்ணாக நடித்தது உண்மையிலே அனைவரையும் ஈர்த்தது.

சமீபத்தில் இவர் நடித்த அஞ்சாமை படத்தின் ட்ரைலர் இன்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.நீட் தேர்வின் மூலம் இன்று வரை பல உயிர் பலியாகின்றது.

எல்லோராலும் நீட் எழுதவும் முடியாது அதே சமயத்தில் எல்லோராலும் நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆகவும் முடியாது.நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரு திறமை மிக்க மாணவனின் நீட் போராட்டத்தை பற்றி விளக்கும் இந்த படத்தில் வாணி போஜன் தன் நடிப்பை மிகவும் அற்புதமாக நடித்து இருப்பார்.வாணி போஜன் பேசிய அஞ்சாமை படத்தை பற்றிய தகவலை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.