வண்ணம் கொண்ட வெண்ணிலவு… வாணிபோஜனின் அழகியப் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,October 27 2021]

சின்னத்திரை நட்சத்திரமாக ஜொலித்து தற்போது சினிமாவில் நுழைந்திருக்கும் நடிகை வாணிபோஜன். எழில் கொஞ்சும் தனது பேரழகால் ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கும் இவர் முதலில் ஏர்ஹோஸ்டஸாகப் பணிபுரிந்தவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. பின்னர் மாடலிங்கில் ஆர்வம் கொண்ட ஆர்வம் கொண்ட இவர் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

அடுத்து தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த இவர் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதுவும் “தெய்வமகள்“, “லட்சுமி வந்தாச்சு“ போன்ற சீரியல்கள் இவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன. பின்னர் ஒருசில ரியால்டி ஷோக்களில் நடுவராக பணிப்புரிந்த வாணிபோஜன் தற்போது வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார்.

முதலில் ஒருசில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்துள்ள நடிகை வாணிபோஜன் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக தற்போது “காசிமேடு“ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதைத்தவிர ஓடிடி தளத்திற்காக நடிகர் ஜெய்யுடன் இவர் நடித்துள்ள வெப் சீரியஸ்ஸும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமூகவலைத் தளங்களில் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை வாணிபோஜன் அவ்வபோது போட்டோஷுட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலை உடுத்தி நடிகை வாணிபோஜன் எடுத்துக்கொண்ட போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.