close
Choose your channels

விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் படத்தின் நாயகி இவரா?

Friday, February 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

விக்ரமின் 60வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை வாணி போஜன் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லலித் குமார் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் தற்போது கவுதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ மற்றும் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment