close
Choose your channels

என்ன சிம்ரன் இதெல்லாம்? திடீரென ஹாட் புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகையால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Thursday, May 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் தற்போது சினிமாவில் நடித்துவரும் நிலையில் அவர் திடீரென கவர்ச்சியான உடையணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட வாணி போஜன் நூற்றுக்கும் அதிகமான விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானவர். தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் வாய்ப்புக் கிடைத்து நடித்துவந்த இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார். இதையடுத்து சினிமாவில் வாய்ப்பு கிடைத்து ‘காசிமேடு’, ‘ஓ மை கடவுளே மகான்‘, ‘லாக்கப்‘ போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ‘தாழ் திறவா‘, ‘பாயும் ஒளி நீ எனக்கு‘, ‘கேசினோ‘ என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி மாடலிங், சீரியல் தற்போது சினிமா என்று படிப்படியாக முன்னேறி வரும் நடிகை வாணி போஜன் எப்போதும் கலக்கலான புடவைகளை அணிந்து போட்டோ ஷுட் நடத்துவார். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் நடிகை வாணி போஜன் தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலித் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அதுகுறித்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில் கடற்கரை காத்து, அழகான ஊஞ்சல் விளையாட்டு, கடற்கரையைப் பார்த்த மாதிரியே பால்கனி என்று தன்னுடைய விடுமுறை நாட்களைக் கழித்துவரும் நடிகை வாணிபோஜன் முதுகுபுறம் தெரியுமாறு உடையணிந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதுவரை சீரியல்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிகை வாணி போஜனைப் பார்த்த ரசிகர்கள் தற்போது முதல் முறையாக கவர்ச்சி உடையில் பார்த்தவுடன் என்ன சிம்ரன் இதெல்லாம் என்பதுபோன்ற கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment