நான் வெற்றி பெற்றவுடன் 'வலிமை' அப்டேட் வந்து விட்டது: வானதி டுவிட்டுக்கு வந்த கமெண்ட்ஸை பாருங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த அப்டேட் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த அளவு ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன், தேர்தல் பிரசாரத்தின் போது நான் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் வரும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது வலிமை அப்டேட் வந்துவிட்டதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் ’நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு பெரும்பாலான நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் ஒருசில பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன. அதில் ஒரு சில கமெண்ட்ஸ்கள் இதோ:
* அடுத்தவர் உழைப்பை திருடுவது அசிங்கம்
* நன்றி அக்கா அப்ப டீசர் எப்ப வரும் சொல்லுங்க
* வெற்றி பெற்ற உடன் என்று உறுதிமொழி அளித்தீர்கள், ஆனால் இரண்டரை மாதம் கழித்துதான் வலிமை அப்டேட் வந்துள்ளது
* தோத்திருந்தா படமே வந்திருக்கும்க்கா !
* இதுக்கு வராமலே இருந்திருக்கலாம் !!!
* அடுத்து ட்ரைலர், டீஸர்னு வாங்கி குடுங்க
#ValimaiUpdate -> #ValimaiUpdated
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 11, 2021
நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது ???????? pic.twitter.com/Yc1DANGJlg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com