'வலிமை' அப்டேட் தந்த வானதி ஸ்ரீனிவாசன்: டுவிட் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பட்டியலில் கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதே தொகுதியில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வானதி சீனிவாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு போட்டியிட வாய்ப்பளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார்
இந்த டுவிட்டுக்கு கமெண்ட் செய்த கோவை அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் எப்போது? என்று கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன் ’நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக ‘வலிமை’ அப்டேட் கிடைக்கும் தம்பி. என்று கூறியுள்ளார். இந்த டுவிட் போது டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது
நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி. #Vanathi4KovaiSouth#Valimai#ValimaiUpdate https://t.co/eFPMday87G
— Vanathi Srinivasan (@VanathiBJP) March 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com