ஃபிளைட்டுக்கு நேரமாச்சு: விஜய்-எஸ்.ஏ.சி அரசியல் விவகாரம் குறித்து வானதி ஸ்ரீனிவாசன்!

  • IndiaGlitz, [Saturday,November 07 2020]

தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் திடீரென விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதும், அதன் பின்னர் அவசரம் அவசரமாக அதனை விஜய் மறுப்பு தெரிவித்ததும், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனையடுத்து இன்று சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக வந்திருந்த வானதி ஸ்ரீனிவாசன் அவர்களிடம் ’விஜய் அரசியல் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ’அதெல்லாம் பேசலாம்... ஃபிளைட்டுக்கு நேரமாச்சு என்று கூறி விட்டு அவசர அவசரமாக சென்றுவிட்டார்

விஜய் அரசியல் விவகாரம் குறித்து பேச விரும்பாமல் ’அதெல்லாம் அப்புறம் பேசலாம் இப்ப ஃபிளைட்டுக்கு நேரமாச்சு’ என வானதி ஸ்ரீனிவாசன் கூறிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முன்னதாக எம்ஜிஆர் படத்தை பாஜகவினர் பயன்படுத்துவது குறித்து கேட்டதற்கு ’நல்ல தலைவர்களின் படங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும், காமராஜர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை நாங்கள் முன்னுதாரணமாகக் கொண்டு செயல் வருகிறோம் என்றும், அதேபோல்தான் எம்ஜிஆரும் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் பதிலளித்தார்