கமல்கிட்ட சாரி சொன்னேன்… பெருந்தன்மை கொண்ட பாஜக எம்எல்ஏவின் உருக்கமான வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. இதில் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்தும் வெளியேறி தற்போது பாஜக சார்பில் வெற்றிப் பெற்றுள்ளார். அதேபோல எம்.ஆர்.காந்தி அவர்கள் 6 முறை தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்து தற்போது முதல் முறையாக அதுவும் 75 வயதில் வெற்றிப் பெற்றுள்ளார். இவர்களின் வாக்கு எண்ணிக்கையும் பாஜக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் பாஜகவின் தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் குறைவான வாக்கு எண்ணிக்கையில் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த வெற்றிக் குறித்து சில எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக தமிழகத்தில் கால் ஊன்றிவிட்டதாகவும் அக்கட்சியைச் சார்ந்த சிலர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இப்படி தமிழகத்திற்கும் பாஜகவிற்குமான உறவு குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் நடிகர் கமல்ஹாசனையும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரையும் எதிர்த்து வெற்றிப் பெற்றுள்ளார். இந்த வெற்றிக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர் நான் நடிகர் கமல்ஹாசனிடம் சாரி கேட்டுக் கொண்டேன். காரணம் தேர்தல் நேரத்தில் தேவையற்ற விவாதங்களையும் வெற்றுச் சொற்களையும் இருவருமே வைத்து விட்டோம்.
இந்தச் செயலுக்கு நான் தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன் எனத் தன் பெருந்தன்மையான மனதை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜகவின் நிலைப்பாடு குறித்தும், எதிர்க்காலத் திட்டம் குறித்தும், முன்பு வைக்கப்பட்டு இருந்த விமர்சனங்கள் குறித்தும் பல்வேறு ஆக்கப் பூர்வமான விளக்கங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments