கல்லூரியில் படிக்கும்போதே காதல்.. 'வானத்தை போல' சீரியல் நடிகையின் நிச்சயதார்த்தம்..!

  • IndiaGlitz, [Tuesday,December 12 2023]

கல்லூரியில் படிக்கும்போதே காதலித்துக் கொண்டிருந்த ’வானத்தைப்போல’ சீரியல் நடிகையின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’வானத்தைப்போல’. இந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும், இந்த சீரியலில் துளசி என்ற கேரக்டரில் கிராமத்து கேரக்டராகவே ஸ்வேதா மாறி ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வானத்தைப்போல’ சீரியலில் இருந்து திடீரென விலகிய ஸ்வேதா தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’கண்ணெதிரே தோன்றினாள்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும்போதே இவர் மதுசங்கர் என்பவரை ஸ்வேதா காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்திற்கு ஏராளமான சின்னத்திரை உலகினர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.

திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களை ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'குறி வச்சா இரை விழனும்': 'தலைவர் 170' படத்தின் மாஸ் டைட்டில்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: 'கண்ணகி'யில் அறிமுகமாகும் நடிகர் நெகிழ்ச்சி..!

டிசம்பர்  15ஆம் தேதி வெளியாகும் 'கண்ணகி' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆதேஷ் சுதாகர் என்பவர்  சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் நெகிழ்ச்சியை

'சூர்யா 43' படத்தின் கதை இதுவா? சுதா கொங்காரா கை வைக்கும் உணர்வு மிக்க விஷயம்..!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக உணர்வுபூர்வமாக கையாளப்பட்டு வரும் ஒரு விஷயத்தை 'சூர்யா 43' படத்தின் கதையாக சுதா கொங்கரா எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிக்கெட் டு ஃபினாலேவுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த அர்ச்சனா.. கூடவே இருந்து குழி பறித்தது யார்?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் இருவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்

யுவன்ஷங்கர் ராஜா குரலில் 'காலேஜ் சூப்பர் ஸ்டார்.. கவினின் 'ஸ்டார்' பாடல் ரிலீஸ்..!

கவின் நடித்த 'ஸ்டார்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று