ஜெயம் ரவியின் 'வனமகன்' ரிலீஸ் திட்டஃம்

  • IndiaGlitz, [Sunday,March 12 2017]

'தனி ஒருவன்', 'போகன்' வெற்றி படங்களுக்கு பின்னர் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'வனமகன்', விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், ஜெயம் ரவியின் இன்னொரு 'பேராண்மை'யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் தியேட்டர் ரிலீஸ் தேதிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் முதல் வாரத்திலும், திரையில் மே 12 அல்லது 19ல் ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீஸ் ஆவதால் நல்ல ஓப்பனிங் வசூல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, சாயிஷா சேகல், வருண், தம்பி ராமைய, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ளார்.

More News

கே.வி.ஆனந்தின் 'கவண்' டிரைலர் விமர்சனம்

கோ, அயன், மாற்றான், அனேகன் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் 'கவண்'. விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்Ī

100 வருட சினிமாவுலகில் டைட்டிலில் முதலிடம் பெற்ற நாயகி

தமிழ் சினிமா மட்டுமின்றி உலகின் எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் டைட்டிலில் முதலில் வருவது நாயகன் பெயர் தான் என்பது எழுதப்படாத விதி. இதற்கு ஆணாதிக்கம் என்று சொல்வதா? அல்லது ஹீரோதான் ஒரு படத்தின் முதுகெலும்பு என்பதால் டைட்டிலில் முதல் இடம் கிடைத்தது என்று கூறுவதா? என்று தெரியவில்லை...

அரசியலில் இருந்து விலகுகிறேன் : இரோம் ஷர்மிளா அதிர்ச்சி அறிவிப்பு

பொது பிரச்சனை ஒன்றுக்காக ஒருநாள் ஜெயிலுக்கு போய்விட்டு வந்தாலே அதை விளம்பரப்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து வரும் அரசியல் உலகில்,  மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (AFSPA) நீக்கக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட சமூக சேவகி இரோம் ஷர்மிளாவுக்கு கிடைத்தது வெறும் 90 வாக்குகளே...

ஆர்.கே ஐடியாவை பின்பற்றுவார்களா புதிய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்?

இந்த 21ஆம் நூற்றாண்டில் வானளவு வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் பயன்படுத்தி கற்பனைக்கும் எட்டாத முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது.

இயக்குனர் செய்யாறு ரவி காலமானார்

பிரபு நடித்த 'தர்மசீலன்', கார்த்திக் நடித்த 'ஹரிச்சந்திரா' ஆகிய படங்களின் இயக்குனர் செய்யார் ரவி காலமானார்.