தேர்தலில் உங்களை தோற்கடித்ததற்கு மகிழ்கிறேன்: வானதி ஸ்ரீனிவாசனின் 'விக்ரம்' பட விமர்சனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி ஸ்ரீனிவாசன், ‘தேர்தலில் உங்களை வென்றதற்கு மீண்டும் ஒருமுறை மகிழ்கிறேன்’ என விக்ரம் படத்திற்கு விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கமலஹாசன் அந்த தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ’விக்ரம்’ படத்தை பார்த்த வானதி சீனிவாசன் தனது டுவிட்டரில், ‘தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒருமுறை மகிழ்கிறேன் என்றும், ’விக்ரம்’ படம் பார்த்தேன் என்றும் உங்கள் கலைப்பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்’ என்றும் கூறியுள்ளார்.
வானதி ஸ்ரீனிவாசன் இந்த பதிவிற்கு கமல் ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
Feeling happy to have won you in Assembly Elections.
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 4, 2022
Watched #Vikram! Keep entertaining us Mr.@ikamalhaasan!
தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன்.#விக்ரம் திரைப்படம் பார்த்தேன்.
உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள். pic.twitter.com/lr7Oi0WI19
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com