நீங்க தான் என் ஹீரோ.. என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனை: வம்சி வெளியிட்ட வீடியோ

  • IndiaGlitz, [Sunday,January 15 2023]

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி ’என் வாழ்நாளில் இதுதான் மிகப்பெரிய சாதனை, நீங்கள் தான் என்னுடைய ஹீரோ’ என்று கூறி பதிவு செய்துள்ள நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவான ’வாரிசு’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலை குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், தாய்மார்களை கவர்ந்த படமாகவும் ’வாரிசு’ இருப்பதால் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் வம்சியின் ’வாரிசு’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை அவரது தந்தை நேற்று பார்த்தார். இந்த படத்தை பார்த்தவுடன் அவர் தனது மகனை கட்டிப் பிடித்துக் கொண்டு முதுகை தட்டி கொடுத்துபாராட்டிய வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு இயக்குனர் வம்சி கூறி இருப்பதாவது: இன்று நான் அப்பாவோடு ’வாரிசு’ திரைப்படத்தை பார்த்தேன், மிகவும் பரவசம் அடைந்தேன். என் வாழ்நாளில் இதுதான் மிகப்பெரிய சாதனை, என் வாழ்நாள் முழுவதும் போற்றும் தருணமாக நான் இதை உணர்கிறேன். நீங்கள் தான் என் ஹீரோ அப்பா! உங்களை நான் நேசிக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.