நடிகர் கொட்டாச்சி இயக்கும் திரைப்படம்: உதவி செய்யும் அருண்விஜய்!

  • IndiaGlitz, [Tuesday,September 08 2020]

தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு கேரக்டரில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தவர் நடிகர் கொட்டாச்சி. இவருடைய மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக நயன்தாராவின் ’இமைக்காநொடிகள்’ த்ரிஷாவின் ’பரமபதம் விளையாட்டு’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் கொட்டாச்சி தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ’வலியும் வழியும்’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்திற்கு பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்ஜஸ்டிஸ் ரஞ்சித் ஒளிப்பதிவில், கேடார் இசையில், விக்ரம்ராஜ் படத்தொகுப்பில் கலைகுமார் பாடல் வரிகளில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை மானஸ்வி புர்டொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாகவும், இந்த டீசரை பிரபல நடிகர் அருண்விஜய் வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாச்சி இயக்கும் முதல் படத்திற்கு அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் டீசரை வெளியிட்டு உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.