படத்தின் புரமோஷன் விழாவில் காதலிக்கு புரபோஸ் செய்த 'வலிமை' வில்லன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா தான் நடித்த படம் ஒன்றின் புரமோஷன் விழாவில் தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன
தல அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் சூப்பர் வில்லனாக நடித்தவர் பிரபல நடிகர் கார்த்திக்கேயா. இவர் ’ராஜா விக்ரமாதித்தன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடந்த போது தனது காதலிக்கு அவர் முழங்காலிட்டு மலர் கொடுத்து ப்ரொபோஸ் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடிகர் கார்த்திக்கேயாவுக்கும் லோகிதா ரெட்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நேற்று தனது காதலை படக்குழுவினர் முன்னிலையில் புரபோஸ் செய்த கார்த்திகேயா தங்களது திருமணம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த திருமணத்தில் இரு வீட்டார் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் கார்த்திகேயா மற்றும் லோகிதா ஆகியோர் காதலித்து வருகின்றனர் என்பதும் முதலில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் அதன்பின் காதலர்களாகவும் இருந்து வந்த நிலையில் தற்போது இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் நவம்பர் 21ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments